301. பாலாவைப் பற்றி "உலகப்புகழ்" இட்லிவடையார் !
என் இனிய தமிழ் மக்களே, ஆரிய / திராவிட உடன்பிறப்புகளே, :)
(அடிக்க வராதீங்க, ஸ்மைலி போட்டிருக்கேன் !)
இது என் வலைப்பதிவின் 301-வது பதிவு (300-வது பதிவாகத் தான் இதை இட இருந்தேன். பிரியதர்ஷினி என்ற குழந்தையின் மருத்துவச் செலவுக்கு உதவி கோரி ஒரு பதிவு அவசரமாக இட வேண்டியிருந்ததால், இட்லிவடையார் என்னை விமர்சிக்கும் இப்பதிவு 301 ஆகி விட்டது !)
சுருக்கமாக ஒரு பின்னணித் தகவல். நண்பர் பெனாத்தலாரின் ஆலோசனையின் பேரில், எனது வலைப்பதிவு குறித்து ஒரு விமர்சனம் எழுதித் தருமாறு, இட்லிவடையிடம் (அவரது ஒரு பதிவில் இட்ட பின்னூட்டம் வாயிலாக) வேண்டுகோள் வைத்தேன். முதலில், 'தமாஷ் பண்ணாதீர்கள்' என்ற அவர், பின்னர் ஒப்புக் கொண்டு, ஒரு விமர்சனம் எழுதி மெயிலில் அனுப்பி வைத்தார். முன்பொரு முறை, என்னை "வசூல் ராஜா MBBS" என்று குறிப்பிட்டு (நான் கௌசல்யாவின் மருத்துவக் கல்விக்கு வேண்டி, பதிவுலக நண்பர்களிடம் பொருளுதவி சேகரித்ததை முன் வைத்து!) டைமிங்காக, ஒரு காமெடிப் பதிவு போட்டிருந்தார். அவருக்கே உரிய பாணியில், இன்னும் சிலரையும் நக்கல் பண்ணியிருந்தார். வலைப்பதிவர்களிடம் அமோக ஆதரவைப் பெற்ற பதிவு அது :)))
அப்பதிவின் சுட்டியை, இட்லிவடையிடமே கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் !
தமிழ் வலையுலகில் இருக்கும் பல ஜாம்பவான்களை ஒப்பு நோக்கும்போது, நான் அப்படியொன்றும் பெரிதாக எழுதிக் கிழித்து விடவில்லை. 300 என்பது பெரிய சாதனையும் அல்ல ! இதை நான் அவையடக்கத்திற்காகச் சொல்லவில்லை என்பதையும் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன் ! என்னிடம் உள்ள 'சரக்கு'க்கு ஏற்ற வகையில், கடந்த 32 மாதங்களாக ஏதோ பதிந்து வந்திருக்கிறேன். இந்த நேரத்தில், இது வரை நான் எழுதியதில் ஒரு 20% (60 பதிவுகள்) 'நிச்சயம் தேறும்' என்று நம்புவதையும் சொல்லிக் கொள்கிறேன் :)
Over to இட்லிவடையார் ! சிவப்பில் இருப்பவை, என் இடைச்செருகல் !
************************
2007ம் வருட ராசிபலனில், "முகம் தெரியாத நண்பர்களிடம் அவஸ்தை" என்று போட்டிருந்தது. ஆனால் இவ்வளவு சீக்கிரம் அது பலிக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. பாலா 300வது பதிவு நான் தான் எழுத வேண்டும் என்று சொல்லிவிட்டர். அவர் தலையெழுத்து அப்படி என்றால் நான் என்ன செய்ய முடியும்? (400வது பதிவிற்காவது ஒரு நல்ல ஆளை(அல்லது அம்மணியைத்) தேர்ந்தெடுங்கள்.
(என் படத்தை, டோண்டு பதிவு ஒன்றிலிருந்து எடுத்து ஜிகினா வேலை செய்து, என்னை 'வசூல் ராஜா' வாக மாற்றிக் காட்டிய இட்லிவடை என்னை முகம் தெரியாத நண்பர் என்பது அநியாயாம்;-))
இப்போது கிரிக்கெட் போல் 100, 200, 300 என்று பதிவு வந்துவிட்டால் யாரையாவது கூப்பிட்டு, "என்னைப் பற்றி நல்லா நாலு வார்த்தை சொல்லுங்க பார்க்கலாம்!" என்று கேட்பது ·பேஷனாகி விட்டது.
(நான் 'என் வலைப்பதிவை விமர்சனம் செய்யுங்கள்' என்று தான் கேட்டுக் கொண்டேன், நல்ல வார்த்தை (மட்டும்) சொல்லுங்க என்று கேட்கவில்லை!).
"பாலா பதிவுகளை நான் விரும்பிப் படிப்பேன். அவர் எடுத்துக் கொள்ளும் தலைப்புகள் எல்லாம்சூப்பர். அவருடைய ஆளுமை எளிமையானது. தமிழ் வலைப்பதிவுலகில் அவருக்கு என்று ஒரு தனி இடம்..." என்றெல்லாம் நான் பொய் சொல்லப் போவதில்லை.
(இதான் இட்லி வடை ஸ்டைல், 'சும்மா நச்சுன்னு இருக்கு':))
தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் நான் பார்க்கும் சமயம் "அதே கண்கள்" (மீனாவின் கண்கள்?) தெரிந்தால், த்ரில்லுக்காக க்ளிக் செய்து என்ன என்று பார்ப்பது வழக்கம்
(அதுக்குத் தானே என் ·போட்டோவைப் போடாம, 'மீனாக்கண்ணோட' கவர்ச்சியான கண்களை வச்சிருக்கேன்;-)).
பதிவுகள் அநேகமாக என்னை ஏமாற்றாமல் தான் இருக்கும் (தேங்க்ஸ்பா!).
முதல் முதலில் சிறுவயது சிந்தனைகள் என்று ஆரம்பித்து என்னைப் போல் சின்னப்பையன்களைக் கவர்ந்தார்
(மெட்ராஸ் பாஷையில, இத 'சந்தில பேந்தா உடறது'ன்னு சொல்லுவாங்க;-) சின்னப்பையனாமில்ல!).
செஸ் பற்றி ஒரு கதை எழுதியிருந்தார்; அது நினைவில் இருக்கிறது
(கலைமகள் போட்டியில பரிசு வாங்கின நம்ம கிரேட் எழுத்தாளர் உஷாவே, இந்த கதையை 'என்னோட மாஸ்டர்பீஸ்' என்று பாராட்டியிருந்தார்கள்!) .
'பல்லவியும் சரணமும்' என்ற பதிவுகளை எழுதி நிறைய மாமிக்களையும் மாமாக்களையும் வளைத்துக் கொண்டார். தற்போது அவை வருவதில்லை. அலுவலகத்தில் நிறைய வேலை என்று நினைக்கிறேன்.
(எதையும் overdo பண்ணினால், ஆர்வம் போயிடும், அப்பப்ப பிரேக் விடணும், இல்லையா ? அப்பதிவுகளில் பின்னூட்டமிட்ட பெண்கள் Jsri, உஷா, ஜெயஸ்ரீ, லதா, சந்திரா, சந்திரவதனா... ஆகியோர். நீங்க யார் யாரை மாமிகள் என்று சொல்ல வருகிறீர்கள் ? அப்பாடி, சிண்டு முடிஞ்சாச்சு:-)))
இப்போதெல்லாம் ஆழ்வார்கள், பாசுரங்கள் என்று "கேசவப்பழங்கள்" (சிவபழத்துக்கு ஆப்போஸிட்) தான் படிக்க முடியும் என்றாகி விட்டது. சங்கர், குமரன், கண்ணபிரான் மட்டுமே இந்தப் பதிவுகளைப் படிக்கிறார்கள் அல்லது பின்னூட்டம் போடுகிறார்கள்.
(இல்லை, வாசிப்பவர் பலர் உள்ளனர். பின்னூட்டங்களை வைத்து எடை போடாதீர்கள் ! சிலர் மெயில் போடுகிறார்கள். பிளாக் கவுண்டர் ஹிட்ஸ் கணிசமாக வருகிறது. தங்களுக்கு ஆழ்வார்கள் மற்றும் பிரபந்தப் பாசுரங்களின் மேல் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம் அல்லது நீங்கள் நாத்திகராக இருக்கலாம் !!! அது உங்கள் இஷ்டம் !)
கிரிக்கெட் விளையாட்டில் நிறைய ஆர்வம் இருக்கும் பாலா, இந்த உலகக் கோப்பைக்கு கிரிக்கெட் பற்றிய பதிவுகள் நிறைய எழுதலாம். இவர் கைராசி, இந்தியா செமி·பைனல் போனாலும் போகலாம்.
(நிச்சயம் கவர் பண்ண முயற்சிக்கிறேன், நன்றி)
என்ன எழுதுவது என்று தெரியாத போது, "உள்ளேன் ஐயா!" என்று அட்டண்டன்ஸ் கொடுக்கும் ('அனானியிடமிருந்து கடிதங்கள்', 'படித்துவிட்டு முடிந்தால் சிரியுங்க' போன்ற பதிவுகளை) சின்னபுள்ளத்தனமான பதிவுகளைத் தவிர்த்து, தன் 'சின்னப்பசங்களை' பற்றி எழுதலாம்.(வாசிக்க:என் அம்முவும் குட்டி ராட்சசியும் !)
(ஒங்க ஆலோசனைக்கு நன்றி. ஆனால், கி.அ.அ.அனானி எழுதி அனுப்பிய சில 'விளாசல்' பதிவுகள் பதிய வேண்டியவை தான் என்பது என் கருத்து! அது போலவே, எனக்குப் பிடித்த, என்னை பாதித்த பல விஷயங்கள் பற்றியும் என் வலைப்பதிவில் பதிய வேண்டும் என்பது என் விருப்பம் ! எல்லாவற்றையும் பற்றி எழுதுவதால் தான், தேன்கூடு எனக்கு 'ஆல்ரவுண்டர்' அந்தஸ்து அளித்தது :))
தமிழ் வலைப்பதிவில் எல்லோரும் நம்மை படுத்திக்கொண்டு இருந்த போது, நிச்சயம் நல்லது செய்ய முடியும் என்று ஏழை மாணவிக்கு படிக்க உதவி செய்து எல்லோரையும் ஆச்சரிய படுத்தினார். தொடர்ந்து இது போன்ற சேவைகளைச் செய்துவருகிறார். சபாஷ் பாலா!
(நன்றி IV, வலைப்பதிவுலக நண்பர்களின் ஆதரவும், ஊக்கமும், ஒத்துழைப்பும் தான், இது போன்ற சமூகநலன் சார்ந்த முயற்சிகளில் என்னை தொடர்ந்து ஈடுபட வைத்து வருகிறது. இந்த நேரத்தில், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்)
பாலாவிடம் ஒரே ஒரு வேண்டுகோள்.இந்தப் பதிவிற்காவது முதல் பின்னூட்டமாக, "Test Comment " போடாமல் இருங்கள்
(நிச்சயம் போடுவேன், அது என் இஷ்டம், அதான் நான் உங்களிடம் கேட்ட என் வலைப்பதிவு பற்றிய விமர்சனத்தை எழுதி அனுப்பி விட்டீர்களே, இனிமேல் உங்க தயவு எனக்கு எதற்கு ? :) விமர்சனத்திற்கு நன்றி, இட்லிவடை!)
அன்புடன்,
இட்லிவடை
**********************
*** 301 ***
22 மறுமொழிகள்:
As unusual my comment will be the first one
Heartiest congratulaitions for 300 posts.More than the number of posts,it is the social work which you are doing needs appreciation.
(You could have avoided your comments in red.They make it difficult for us to follow what idlyvadai has said.You can atleast seperate them into two parts or atleast post idlyvadai's post seperately)
TEST COMMENT
நீங்க போடக்கூடாதுன்னுதானே இட்லிவடை கட்டளை :-)
301'க்கு வாழ்த்துக்கள் பாலா.... :)
இப்பதிவின் முதல் பின்னூட்டத்தை என்னை போட விடாமல் செய்து, என்னை நக்கலடித்த செல்வனை வன்மையாக கண்டிக்கிறேன் :)))))))
செல்வன்,
நீங்கள் கேட்டுக் கொண்டபடி, இட்லிவடை எழுதியதையும், என் கருத்துக்களையும், வாசிப்பதற்கு வசதியாக தெளிவாக பிரித்திருக்கிறேன். ஓக்கேயா ?
பெனாத்தலார்,
நன்றி :)))
இராம்,
நன்றி :)
நல்ல விமர்சனம். விமர்சனத்துக்கும் நல்ல விமர்சனம்! :))
300 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
நீங்கள் ஆழ்வார்கள் பத்தி நீங்க சொன்னது சரிதான். கிட்டத்தட்ட எல்லாவற்றையும் படித்தாலும் ஒன்றிரண்டில் மட்டுமே பின்னூட்டமிட்டு இருக்கிறேன்.
இட்லிவடையார் குறிப்பிட்ட சிலபதிவுகள் நான் படித்திராவை. இப்பொழுது படிக்கிறேன்.
மீண்டும் வாழ்த்துக்கள்.
அப்புறம் அந்த கண்ணு மீனாவோடது இல்லைன்னு நினைக்கிறேன். சரிதானே!;))
//சிவப்பில் இருப்பவை, என் இடைச்செருகல் !
//
உண்மையாவா? எந்த சிவப்பை சொல்றீங்க? :-))
301க்கு வாழ்த்துகள் சீனியர்.
ஆஹா குமரன், மேட்டர் இதுதானா? பழி ஓரிடம் பாவம் ஓரிடம் அப்படின்னு சொல்லற மாதிரி நம்மளை போட்டு வாட்டறாங்களே. பாலாண்ணா நம்ம பெயரை கொஞ்சம் க்ளியர் பண்ணக்கூடாதா? :))
அடே அப்பா .. 301 !!
வந்த வழிக்கும்,தொடரப் போவதற்கும்
வாழ்த்துக்கள்
பாலா, 301 வாழ்த்துக்கள்! ஐயகோ! நானும் இருநூற்றை நெருங்குகிறேனே, நுனிப்புல் போன்ற இனிப்பான புல்லை சுவைத்தது இல்லை என்று எனக்கு யார் நற்சான்றிதழ் தருவார்?
இலவ்சம்! அது மீனா கண்ணுப்படம் தான், அதாவது மீனாவின் கண்ணின் படம் என்\று பாலாவிடம்
நான் முன்பேக் கேட்டுவிட்டேன்.
குமரன்! ஆஹா :-)))))))))))))
-usha
300க்கு வாழ்த்துக்கள் பாலா. தங்கள் பணி தொடரட்டும்.
301 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
தங்களது பதிவுகளில் எனக்குப் பிடித்தது பிறர்க்கு உதவும் நோக்கத்துடன் வரும் "உயிர்வாழ உதவி வேண்டும் பதிவுகள்"
அப்புறம் கிராமத்து அரட்டை அனானி
சங்கர் என்று சிவன் பேரைக் கொண்ட சுத்த சைவனான என்னை "கேசவப்பழம்" ஆக்கிய இட்லிவடையை வன்மையாக கண்டிக்கிறேன் :)
இதைப் படித்து விட்டு நமுட்டு சிரிப்பு சிரிக்கும் பாலாவிற்கு ஒரு முறைப்பு + 300 பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.உன் பல்சுவைப் பணி தொடரட்டும்
after thought : பொதுவா விமர்சனம் பண்ணும் போது பதிவரை மட்டும் தான் குறிப்பிடுவாங்க..பின்னூட்டமிட்ட என்னையும் பதிவில் குறிப்பிட்ட இட்லி வடைக்கு பெஸல் டாங்ஸ்
இலவசக்கொத்தனார்,
//நல்ல விமர்சனம். விமர்சனத்துக்கும் நல்ல விமர்சனம்! :))
300 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
//
நன்றி, பாஸ் :)
//நீங்கள் ஆழ்வார்கள் பத்தி நீங்க சொன்னது சரிதான். கிட்டத்தட்ட எல்லாவற்றையும் படித்தாலும் ஒன்றிரண்டில் மட்டுமே பின்னூட்டமிட்டு இருக்கிறேன்.
//பின்ன, ஆழ்வார்கள்னா சும்மாவா, நெறைய வாசகர்கள் இருக்காங்கன்னு இட்லிவடைக்கு தெரிய வேண்டாமா ? :))))
//
குமரன் (Kumaran) said...
//சிவப்பில் இருப்பவை, என் இடைச்செருகல் !
//
உண்மையாவா? எந்த சிவப்பை சொல்றீங்க? :-))
301க்கு வாழ்த்துகள் சீனியர்.
//
நன்றி, குமரன். அப்ப, கொத்ஸ் தான் 'விட்டது சிகப்ப' ? ;-)
கொத்ஸ்,
//ஆஹா குமரன், மேட்டர் இதுதானா? பழி ஓரிடம் பாவம் ஓரிடம் அப்படின்னு சொல்லற மாதிரி நம்மளை போட்டு வாட்டறாங்களே. பாலாண்ணா நம்ம பெயரை கொஞ்சம் க்ளியர் பண்ணக்கூடாதா? :))
//
சரி, சரி, ஒங்க பேரை க்ளியர் பண்ரேன் :)
தருமி சார்,
'அடேங்கப்பாவுக்கும்' பாராட்டுக்கும் நன்றி :)
மேடம் உஷா,
வாங்க !
//பாலா, 301 வாழ்த்துக்கள்! ஐயகோ! நானும் இருநூற்றை நெருங்குகிறேனே, நுனிப்புல் போன்ற இனிப்பான புல்லை சுவைத்தது இல்லை என்று எனக்கு யார் நற்சான்றிதழ் தருவார்?
//
200 வது பதிவைப் போடுங்கள், பாராட்டி விடுகிறேன், அதுக்கென்ன :) நீங்க 'நுனிப்புல்' அப்டின்னுன் அவையடக்கத்தில், உங்க வலைப்பதிவுக்கு பேர் வைத்துள்ளீர்கள் !!!
mathuraiampathi,
வாழ்துக்களுக்கு மிக்க நன்றி !
சங்கரா,
நன்றி, 'கேசவப்பழமாகவும்' தான் இருந்து விட்டு போங்களேன் ! என்ன இப்ப :)
Hariharan,
நன்றி. கி.அ.அ.அனானி ஒங்க பாராட்டை படிச்சா ரொம்ப சந்தோஷப்படுவார் :)
வாழ்த்துக்கள் பாலா....
எனது பெயரைக் குறிப்பிட்டு :) பாராட்டிய ஹரிகரனுக்கு நன்றி
பாலா அவர்களே 287 க்கு வாழ்த்துக்கள் ஏன்னா 14 பதிவுகள் என்னுது :)
கி.அ.அ.அனானி
எ.அ.பா அவர்களே - நான் என்ன சொல்லுவது? திருவல்லிக்கேணியில் நீங்க இருக்கலாம், அதற்காக என் பதிவையும் திருவல்லிக்கேணி கோயில் மதில்சுவர் போல் ஆக்கிவிட்டீர்களே :-). (கோயில் மதில் சுவற்றில் அடித்திருக்கும் சிகப்பு பெயிண்டும் உங்கள் கைவண்ணமா ? )
இட்லி வடை,
இதுக்கு நீங்க கமெண்ட் போடாமலே இருந்திருக்கலாம் ;-)))) வருகைக்கு நன்றி.
கி.அ.அ.அ,
வாங்க ! பாராட்டு மழையில் மகிழ்ச்சியா ???? :)))
அனானி,
நன்றி.
Post a Comment